உலகத்திலேயே நாடி ஜோதிடம் தோன்றிய வைத்தீஸ்வரன் கோயில் என்ற நகரத்தில் நாடி ஜோதிட பரம்பரையில் பிறந்து ஐந்து தலைமுறைகளாக நாடி ஜோதிடம் பார்த்துவரும் எங்கள் குடும்பம் இன்று பல இடங்களில் கிளை அலுவலகங்கள் அமைத்து நாடி ஜோதிடம் பார்த்து வருகிறோம். 35 ஆண்டுகளாக தொடர்ந்து பல தினசரி நாளேடுகளில் அரசியல் தலைவர்கள் எதிர்காலம் பற்றியும், மத்திய மாநில அரசியலில் யார் வெற்றி பெருவார்கள், ஆட்சி அமைப்பது யார், Share Market, இயற்கை சீற்றங்கள், உலகளாவிய செய்திகள் என மிக துல்லியமாக பலன் கூறி வருகிறோம்.
நாங்களே பஞ்சாங்கம் கணித்து வெளியிடுகிறோம். VPS வேத பாடசாலை சாரிடபுல் டிரஸ்ட் என்ற பெயரில் சமூக சேவை செய்து வருகிறோம். இலவச தங்கும் இடம், மற்றும் உணவு வழங்கி இதுவரை 500 க்கும் அதிகமான வேத புரோகிதர்கள், மற்றும் ஜோதிடர்களை உறுவாக்கி இருக்கிறோம். வேத முறைப்படி அனைத்து பூஜைகள், ஹோமங்கள், உலக நன்மை கருதி அனேக குரு பயிற்ச்சி, சனி பயிற்சி ஹோமங்கள், கும்பாபிஷேகம் என அனைத்து பூஜைகளும், கிரக பரிகார பூஜைகளும் செய்து வருகிறோம்.இதற்க்கு சம்பந்தபட்ட புகை படங்கள், பத்திரிகை செய்திகள், பிரபல அரசியல் தலைவர்களின் எதிர்காலம் பற்றிய செய்திகள் காணலாம்.
எங்களிடம் நாடி ஜோதிடம் (Palm Reading) Thalapathra Grandham பார்த்து அவர்களின் எதிர்காலத்தை பற்றி தெரிந்துகொள்ள வெளி நாடுகளில் இருந்தும், உள்நாட்டில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள், தயாரிப்பாளர்கள், சமூதாயத்தில் புகழ் பெற்ற பல்வேறு துறையை சார்ந்தவர்கள் நேரில் வருகிறார்கள். பலர் ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்கிறார்கள்.
ஆகையால் அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை மீறாத வகையில் அவர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் தொடர்ப்பான அனைத்து விஷயங்களும் ரகசியமாக வைக்கபடுகின்றன. எங்கள் வாடிக்கையாளர்கள் புகை படங்களை வெளிப்படையாக Website-ல் வைக்க மாட்டோம்.